யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் விபத்துச் சிகிச்சைப் பிரிவுக் கட்டடப் பணியை தொடர்வதற்கு அமைச்சரவை அனுமதி!

யாழ் போதனா மருத்துவமனையின் விபத்துச் சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடப் பணிகளைத் தொடர்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் இரண்டாம் கட்ட கட்டட அமைப்புப் பணிகளை முன்னெடுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தப் பணிகள் ஆயிரத்து 224.6 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு 5 ஆம் மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்றை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு முதலாம் கட்ட அமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்டமாக அதன் 2 ஆம் மாடியில் இருந்து 5 ஆம் மாடி வரையில் அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்வனவுக் குழுவின் பரிந்துரைக்கு அமைவாக மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் இரண்டாம் கட்ட அமைப்புப் பணிகள் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டுமான வேலைகள் தொடர்பாக சுகாதாரம் போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார்.
Related posts:
|
|