யாழ்ப்பாணம் போதனாவுக்கு 605 மில்லியன் ஒதுக்கீடு!

Saturday, May 12th, 2018

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 3 மாடிக் கட்டடத்தில் புனர்வாழ்வு மத்திய நிலையத்தை அமைத்தல், உபகரணங்களை வழங்குதல், மற்றும் உத்தியோகத்தர்களுக்கு 3 வருட பயிற்சி நெறியை வழங்கல் செயற்றிட்டத்தை 605 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இலங்கையிலுள்ள இயற்கை சுகாதார சேவை மத்திய நிலையமாவதுடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சிகளும் இதன் மூலம் வழங்கப்படுகின்றது.

2017 ஆம் ஆண்டு இந்த வைத்தியசாலையில் 39 ஆயிரத்து 390 சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் 12 ஆயிரத்து 486 சத்திர சிகிச்சைகளுக்கு பின்னரான புனரமைப்பு பாதுகாப்புக்கு தேவையான மாற்று சத்திர சிகிச்சைகளாகும்.

புனரமைப்பு பாதுகாப்பு சேவைக்காக இந்த வைத்தியசாலையில் பௌதீக வசதி மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சிகளை மேம்படுத்த வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக யாழ். போதனா வைத்தியசாலையில் 3 மாடிக் கட்டடத்தில் புனரமைப்பு மத்திய நிலையத்தை அமைப்பதற்கும் இதற்கான உபகரணங்களை விநியோகிப்பதற்கும் சம்பந்தப்பட்ட பணியாளர் சபையின் ஆற்றலை மேம்படுத்துவதற்காக 3 வருட பயிற்சி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கான உத்தேசத் திட்டத்தை 605 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்வைத்த ஆவணங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Related posts:


யாழ் . மாநகரில் அதிகரிக்கும் டெங்குத் தொற்று – 6 மாதங்களில் 224 பேர் பாதிப்பு என மாநகர சுகாதாரப் பிர...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை: நீதவான் நலன்புரி நிலையத்தில் வாழ்ந்த 70 குடும்பங்களுக்கு ...
இலங்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மாவட்ட மட்டத்தில் மீளா...