யாழ்ப்பாணம் – பொன்னாலை வீதி அகலிப்பிற்காக காணி சுவீகரிப்பு!
Sunday, February 25th, 2018
யாழ்ப்பாணம் பொன்னாலை வீதி அகலிப்பதற்கான முதற்கட்ட ஏற்பாடாக காணி சுவீகரிக்கும் நடவடிக்கை நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நிறைவடையும் கட்டத்தை அடைந்துள்ளன.
குறிப்பாக சுவீகரிக்கப்படவிருக்கும் காணிகளுக்கான நில அளவை வரைபடம் தயாரிக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.
ஏற்கனவே காணிகள் சுவீகரிப்புத் தொடர்பாக உரிய சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த வீதியை அகலித்து புனரமைப்புச் செய்வதற்கான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும் இந்த ஆண்டு புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related posts:
எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூர...
சிறுவர்களுக்கான உன்னதமான உலகத்தை உருவாக்க வேண்டும் - உலக சிறுவர் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் ...
காய்ச்சலுக்கு பாராசிட்டமால் தவிர்ந்த ஏனைய வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளக் வேண்டாம் - விசேட வைத்தி...
|
|