யாழ்ப்பாணம் பெரியபுலம் பாடசாலையில் மாணவிகளுடன் தகாதமுறையில் ஈடுபட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல்! 

Thursday, June 23rd, 2016

யாழ்ப்பாணம் பெரியபுலம் பாடசாலையில் மாணவிகளுடன் தகாதமுறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை அடுத்த மாதம்-4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  யாழ். நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை(23) உத்தரவிட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரொருவர் அங்கு கல்வி பயிலும் மாணவிகள் சிலருடன் தகாதமுறையில் நடந்து கொண்டதாகப்  பாடசாலை மாணவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில் துஸ்பிரயோகத்திற்குக் காரணமான ஆசிரியரைக்  கைதுசெய்து அவருக்கு எதிராகச்  சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப்  பாடசாலை மாணவர்களும், பழைய மாணவர்களும் வலியுறுத்தியிருந்தனர். இந்தக்  கோரிக்கையை முன்வைத்து நேற்றுப் புதன்கிழமை(22) போராட்டமொன்றையும் நடாத்தியிருந்தனர்.

இதனையடுத்துக்  குறித்த ஆசிரியர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்டச்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் உறுதிமொழி அளித்ததன் பேரில் மாணவர்கள் தமது போராட்டத்தைக்  கைவிட்டிருந்தனர்.

குறித்த ஆசிரியரை நேற்றைய தினம்  கைதுசெய்த பொலிஸார் விசாரணைகளை அவர்களிடம் தீவிர விசாரணைகள் மேற்கொண்டனர். இதனையடுத்துஇன்றைய  தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர். இதன்போதே நீதவானால் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Related posts: