யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கலைக்கப்பட்டது!
Monday, March 13th, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பதிவாளர், பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவித்துள்ளார்.
பல்கலைக்கழகச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறி, கலைப்பீட பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் ஆகியோரின் எழுத்துமூல மற்றும் வாய்மொழிமூலமாக வழங்கப்பட்ட பணிப்புரைகளை மீறியமை ஆகியவற்றுக்காக, கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒழுக்கவிதிகளை மீறிய மாணவர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்
Related posts:
இலங்கை - சுவிஸ்சர்லாந்து இடையே ஒப்பந்தம் கைச்சாத்து!
கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் 'புதிய வழமை' கோட்பாட்டுக்கு அமைய நாட்டின் செயற்பாடுகள் இன்று மீண்ட...
இக்கட்டான காலத்தில் யாழ். மக்களுக்கு பெற்றுக்கொடுத்ததை இன்று மேலும் வலுவடையச் செய்துள்ளார் அமைச்சர் ...
|
|