யாழ்ப்பாணம் பருத்தித்துறையை இணைக்கும் வல்லைப் பாலம் மீண்டும் செப்பனிடப்படுகின்றது!

Tuesday, May 26th, 2020

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை இணைக்கும் வீதியின் முக்கிய பாலமாக விளங்கும் வல்லைப் பாலம் பழுதடைந்திருந்த நிலையில் தற்போது வீதி அதிகார சபையால் செப்பனிடப்படு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

1995 ஆம் ஆண்டு சூரியக் கதிர் நடவடிக்கை காலப்பகுதியில் குண்டுவைத்து தகர்க்கப்பட்ட குறித்த பாலமானது பின்னர் தற்காலிக பாலமாகவே பல தடவைகள் செப்பநிடப்பட்டு மக்களின் போக்கவரத்து தேவைகளுக்கு விடப்பட்டிருந்தன.

இந்நிலையில் யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் இரும்பு கேடர்களால் குறித்த பாலம் புனரமைக்கப்பட்டிருந்த நிலையில் அப்பாலத்தின் அலுமினிய தகடுகள் வளுக்கல் தன்மை உடையனவாக இருப்பதனால் பல விபத்துக்கள் நடப்பதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியிருந்ததுடன் அப்பாலத்தை கொங்கிறீற் பாலமாக அமைத்து தருமாறும் கோரியிருந்தனர்.

ஆனாலும் அது இதுவரை ஈடேறாத நிலையில் தற்போதும் இரும்பு பாலமாகவே வீதி அதிகார சபையினரால் செப்பனிடப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: