யாழ்ப்பாணம் நூலகத்துக்கு 1.10 லட்சம் நூல்கள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

Tuesday, August 28th, 2018

யாழ்ப்பாணம் நூலகத்துக்கு தமிழக அரசு சார்பில் 1.10 லட்சம் நூல்கள் வரும் செப்டம்பர் மாதம் வழங்கப்பட உள்ளதாக பாடசாலைக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்  தெரிவித்தார்.

தமிழ்நாடு நூல் வெளியீடு, விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் 4 -ஆவது சென்னை புத்தகத் திருவிழா ராயப்பேட்டை ஒய். எம். சி.ஏ. மைதானத்தில் கடந்த 17 – ஆம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது –

இலங்கையில் நடைபெற்ற கலவரத்தின்போது, யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டது. அதில், பல லட்சம் அரிய நூல்கள் எரிந்து சாம்பலாகின. அந்த நூலகத்துக்கு தமிழக அரசு சார்பில் 1.10 லட்சம் நூல்கள் வழங்க உள்ளோம். யாழ்ப்பாணத்துக்கு செப்டம்பர் 15-ஆம் தேதி செல்லும்போது இந்த நூல்கள் அனைத்தும் நூலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

Related posts: