யாழ்ப்பாணம் நகர்ப் பகுதி முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்ற நடவடிக்கை!
Thursday, August 3rd, 2023யாழ்ப்பாணம் நகர்ப் பகுதி முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் போக்குவரத்து காவல் துறையினர் முன்னெடுத்தனர்.
யாழ் நகர் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலைமுதல் காவல் துறையினர் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாடகைக்கு பயணிக்கும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டணமானி பொருத்தாமையினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வவுனியாவில் தீயணைப்பு பிரிவு!
தேவையான எரிபொருளினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ரஷ்ய அரசாங்கத்திடம் இலங்கை மீண்டும் கோரிக்கை!
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளன - பொது பாதுகாப்ப...
|
|