யாழ்ப்பாணம் செல்ல முன்பதிவுகளை செய்யலாம் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!

Thursday, July 13th, 2023

அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை (15) ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசந்துறை வரையிலான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான  ரயில் பாதையிலான போக்குவரத்து  கடந்த ஜனவரி மாதம் வீதி புனரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது.

இந்திய கடன் உதவியின் கீழ் 62 கிலோ மீற்றர் தூரம் சீர்செய்யப்பட்டு 33 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்தப்  பாதை மூலம் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில்களுக்கான ஆசன முன்பதிவு சேவையும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தையிட்டி கிழக்கு பகுதி மக்களது வாழ்வியல் நிலைமை தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக...
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தனியார்த்துறை நிறுவனங்களில் சுகாதார குழுக்கள் ஸ்தாபிப்பு - தொழ...
பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் - அவுஸ்திரேலிய...