யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் வெடிபொருட்கள் மீட்பு!

Saturday, September 19th, 2020

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் இருந்து வெடிபொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரின் வாக்கு மூலத்துக்கு அமைய இந்து மயானத்தை சோதனையிட்ட போலீசார் குறித்த வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.தற்போது நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டு இந்து மயானத்தில் உள்ள வெடி பொருட்கள் மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

Related posts: