யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அடுத்தவாரம்முதல் இரத்மலானை மற்றும் சென்னைக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்!

Sunday, August 7th, 2022

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அடுத்தவாரம் இரத்மலானை மற்றும் சென்னை போன்ற இடங்களுக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு இந்த சேவை முன்னெடுக்கப்படும்.

கொரோனா காலப்பகுதில் விமான சேவைகள் நீண்ட நாட்களாக தடைப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை விரைவில் செயற்படுத்துமாறு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

000    

Related posts: