யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை மீள ஆரம்பம் – யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன்!

Monday, June 8th, 2020

இன்றுமுதல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

புகையிரதத்தில் பயணம் செய்ய விரும்புவோர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தமது ஆசனமுன் பதிவுகள் மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம்முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த வடபகுதிக்கான புகையிரத சேவைகள் அனைத்தும் இன்று 8ஆம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இன்றுகாலை முதலாவது புகையிரதமாக உத்தரதேவி புகையிரதம் காங்கேசன்துறையிலிருந்து 5:30 க்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து கொழும்புநோக்கி புறப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து 6 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்திலிருந்து 6:45 மணியளவில் கொழும்பு நோக்கி புறப்பட உள்ளது அதேபோல் நாளை மறுதினம் 9 ஆம் திகதி 3:45 மணிக்கு ஸ்ரீதேவி புகையிரதம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட உள்ளது.

எனவே புகையிரதத்தில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் இன்றிலிருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தமது ஆசனங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts:


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் திருமதி கலாவதி அவர்களால் வறிய மாணவர...
வீதி புனரமைப்பின் போது சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படும் - ஜனாதிபதி செயலணி...
புலிகளுக்கும் ஜே.வி.பிக்கும் பாரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்கா...