யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் மற்றொரு புகையிரத சேவையாக “உத்தரதேவி” இன்றுமுதல் ஆரம்பம்!

Friday, November 12th, 2021

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் 3 ஆவது புகையிரத சேவையாக உத்தரதேவி புகையிரதம் தனது சேவையை இன்று (12/11) தொடக்கம் மீள ஆரம்பித்துள்ளது.

கொழும்பிலிருந்து இன்று காலை 11.50 மணிக்கு புறப்படும் உத்தரதேவி ரயில் மாலை 6.00 யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மறுநாள் சனிக்கிழமை காலை 6.10 மணிக்கு உத்தரதேவியும் காலை 9.35 மணிக்கு யாழ்தேவியும் குளிரூட்டப்பட்ட ரயில் பிற்பகல் 1.37 மணிக்கும் வழமையான சேவையில் ஈடுபடவுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் இரவு நேர தபால் ரயில் சேவையும் வழமைபோல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: