யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் குவிந்திருந்த கடல் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையில் வேலணை பிரதேச சபை!
Tuesday, December 8th, 2020புரவி புயலால் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதான வீதியில் குவிந்திருந்த கடல் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையை வேலணை பிரதச சபை மேற்கொண்டுவருகின்றது.
கடந்தவாரம் இலங்கையை குறிப்பாக வடபகுதியை புரட்டிப்போட்ட புரவி புயலால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வீதிகளும் பாலங்களும் கடற் கழிவகளால் நிரம்பிய நிலையில் காணப்பட்டன.
இந்நிலையில் ஊர்காவற்றுறை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பண்ணை பாலத்திலிருந்து அல்லைப்பிட்டி சந்திவரையான பிரதான வீதி கடற் சாதாளைகள் மற்றும் கடல் கழிவு பொருட்களால் நிரம்பி காணப்பட்டன. இதனால்; பொதுமக்கள் போக்குவரத்தில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்தனர்.
இந்நிலையிவல் கடும் மழை தொடரும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் வேலணை பிரதேச சபை மக்களினதும் பிரதேசத்தினதும் பாதுகாப்பையும் தூய்மையையும் கருத்திற்கொண்டு அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களது ஒத்துழைப்புடன் சபையின் செயலாளர் சிவஞானவேல் தலைமையில் மேற்கொள்;ளப்பட்ட குறித்த நடவடிக்கையை வேலணை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|