யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் க.பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு!

Wednesday, March 29th, 2017

யாழ்.மாவட்டத்தின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கடந்த வருடம் 267 மாணவர்கள் க.பொ. த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் சித்திவீதம் நூறு வீதமாகவுள்ளதாகக் கல்லூரியின் அதிபர் ஐ.தயானந்தராஜா தெரிவித்துள்ளார்.

எமது கல்லூரியில் க.பொ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய அருளானந்தம் அபிநந்தன் தேசிய ரீதியில் ஐந்தாவது இடத்தினையும், தமிழ்மொழி மூலம் முதலாமிடத்தினையும் பெற்றுள்ளார்.

பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 36 மாணவர்கள் 9 ஏ சித்தியும், 32 மாணவர்கள் 8 ஏ,பி சித்தியையும், 31 மாணவர்கள் ஏழு ஏ சித்தியையும் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts: