யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் காலமானார் !

Tuesday, February 1st, 2022

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 5 மணியளவில் சுகவீனம் காரணமாக மொனராகலை – சிறுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தில்காந்தி, என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மொனராகலை மரக்கலையை சேர்ந்த தில்காந்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை நெறியை மேற்கொண்டார்.

பின்னர், அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்னர் அவருக்கு இருதய சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

ஊவா மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றியதன் மூலம் தில்காந்தி தமது சொந்த ஊருக்கும் மலையகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அத்துடன் செய்தி வாசிப்பு மற்றும்  நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தல் போன்ற துறைகளிலும் அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்தபோதே தமது திறமையை அவர் வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

"கனவு காணுங்கள்" என்ற ஒற்றை வார்த்தையில் உலகையே திரும்பிபார்க்க வைத்த கனவு நாயகன் அப்துல் ...
நாட்டின் வளர்ச்சி தொடர்பில் இளைஞர் சமூகம் கவனம் செலுத்த வேண்டும் - இளைஞர்களுக்கு அமைச்சர் நாமல் அழைப...
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூற...