யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்குத் திங்கள் வரை காலக்கெடு விதித்துள்ள மாணவர்கள்!

Thursday, March 30th, 2017

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள 13 மாணவர்களினதும் வகுப்புத் தடையை உடனடியாக நீக்கக் கோரி யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப்பீட மாணவர்கள் இணைந்து நேற்று (29) காலை கறுப்புத் துணியால் வாயைக் கட்டியவாறு அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுத்தனர்.

இதன் போது பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு எதிராகத் தமது கடுமையான கண்டனத்தையும் வெளிப்படுத்தினர்.

கடந்த-11 ஆம் திகதி பல்கலைக்கழக கலைப்பீடப் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்குமிடையில் முறுகல் நிலையேற்பட்டது. இதன் போது பல்கலைக் கழக சிற்றுண்டிச் சாலயிலுள்ள பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தையடுத்து குழப்ப நிலைக்குக் காரணமெனக் குற்றம் சாட்டப்பட்டு 13 மாணவர்களுக்கு நேற்றைய தினம் வகுப்புத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்ட 13 மாணவர்களையும் எதிர்வரும் திங்கடகிழமைக்கு முன்னர் மீள இணைக்கா விடில் மாணவர் ஒன்றியத்தின் ஆதரவுடன் பல்கலைக் கழகத்தின்  அனைத்துப் பீடங்களையும் முடக்கிப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.

Related posts: