யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா விமரிசை!

Tuesday, January 10th, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை(10) காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறத் தகுதியான மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
இந்தப் பட்டமளிப்பு விழா நாளை புதன்கிழமையும் இடம்பெறவுள்ள நிலையில் 2151 மாணவ,மாணவிகள் இந்த வருடப் பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகளாகப்  பட்டம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
164 மாணவர்கள் பட்டப்பின் தகமைச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதுடன், 1275 மாணவர்கள் உள்ளக மாணவர்களாகவும் பட்டம் பெற்றுக்கொள்ளவுள்ளனர். 484 மாணவர்கள் வெளிவாரிப்  பட்டதாரிகளாக பட்டம் பெறுவதுடன், 32 மாணவர்கள் டிப்ளோமா பட்டதாரிகளாக பட்டம் பெற்றுக் கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
unnamed (3)
unnamed (4)
unnamed (1)
unnamed (2)

Related posts: