யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் கைது!

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கரையோர காவல் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – தொண்டைமனாறு பெரியகடற்கரை பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மோகனராசா மற்றும் ராசலிங்கம் ராசசிறி ஆகியோரே தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் சிறியரக படகொன்றும் இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
Related posts:
யாழ் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்- நீர்வள சபை கட்டிட திறப்பு விழா நிக...
ஆசிரியர் உயிரிழப்பு: அதிபர் மீது குற்றச்சாட்டு - விசாரணை நடத்தவேண்டும் என்று தமிழர் ஆசிரியர் சங்கம் ...
ராஜித்த சேனாரத்னவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்று உத்...
|
|