யாழ்ப்பாணத்துக்கு மேலும் தடுப்பூசிகளை வழங்கத் தயார் – இராணுவத் தளபதி அறிவிப்பு!

“யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்குத் தொடர்ச்சியாக கொரோனாத் தடுப்பூசிகளை வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம்.” என கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
“யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, ஜனாதிபதியின் பணிப்பில் 2 ஆயிரத்து 100 தடுப்பூசிகள் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன.
யாழ். மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளில் யாழ். பல்கலைக்கழகத்துக்கு வழங்குவதால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. நாங்கள் மேலும் தடுப்பூசிகளை யாழ். மாவட்டத்துக்கு வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்” – என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரநாயக்க பேரவலம்: தகவல்களில் குழப்பம்!
நாவலர் வீதியில் 32 பவுண் நகைகள் கொள்ளை!
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்தள்ள...
|
|