யாழ்ப்பாணத்தில்  25 பவுண் கொள்ளை!

Friday, March 24th, 2017

 

யாழ்.கச்சேரி காட்டுக்கந்தோர் வீதியில் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி விட்டு 25 பவுண் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

இன்று வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் வீட்டுக் கதவினை உடைத்து உள் நுழைந்த கொள்ளையர்கள் முகத்தை கறுப்பு துணியால்கட்டிவிட்டு, வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் வீட்டு அலுமாரியில் இருந்த சுமார் 13 லட்சம்மதிக்கத்தக்க 25 பவுண் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.வீட்டில் இருந்த நபர் அவர்களை பிடிக்க முயற்சித்த வேளையில், மூவரும் தப்பிஓடிச்சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக குறித்த வீட்டு நபர்கள் 119 தொலைபேசி ஊடாகயாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சம்பவம் தொடர்பாக முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.முறைப்பாட்டின் பிரகாரம் வீட்டிற்கு மோப்ப நாயுடன் வந்த பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டுள்ளனர்.

தடயங்கள் ஏதும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என்பதுடன், வீட்டில் இருந்தவர்களுக்கு சிறுகாயங்களும் ஏற்பட்டுள்ளன.குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் தீவிர விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: