யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் 10 ஆயிரத்து 261 குடும்பங்கள் பாதிப்பு!

Friday, November 12th, 2021

தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக 10 ஆயிரத்து 261 குடும்பங்களைச் சேரந்த 34 ஆயிரத்து 75 பேர் யாழ். மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு விபரங்களை யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டது.

அந்த அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக 86 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே இடம்பெயர்ந்த வர்கள் என்ற வகையிலே 5 தற்காலிக இடங் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முழுமையாக சேதம் அடைந் துள்ள நிலையில் 111 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றுள்ளது

Related posts: