யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்குக் கொரோனா – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்குக் கொரோனா தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்களில் இருவர் கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவபீட ஆய்வு கூடம் இரண்டிலும் 778 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 22 பேருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 7 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனையில் முடிவைக் கண்டறிய முடியாதிருந்தது அறிக்கையிடப்பட்டது.
அவர்களிடம் மீளவும் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டபோது ஒருவருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகளிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இருவருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|