யாழ்ப்பாணத்தில் மாணவன் மாயம் : பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணத்திற்கு விறகு கொண்டு சென்ற 17 வயதான மாணவரொருவர் மாயமாகியுள்ளதாக யாழ்ப்பாணம் மற்றும் பூநகரி பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளது.
உயர்தரத்தில் கற்கும் குறித்த மாணவன் கடந்த 29ஆம் திகதி மாலை யாழ்.சாவகச்சேரியிலுள்ள வீடொன்றுக்கு சைக்கிளில் விறகு கொண்டு சென்றுள்ளார். விறகினை கொடுத்துவிட்டு மீண்டும் வீடு திரும்ப புறப்படும் போது இருள்சூழ தொடங்கி விட்டதால் அந்த வீட்டிலேயே தங்கியுள்ளார்.
அடுத்த நாள் அதிகாலை 5.30 மணியளவில் மாணவன் யாழிலுள்ள குறித்த வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றதாக விசாரணைகளின் போது வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் இதுவரை மாணவன் தொடர்பில் எதுவித தகவல்களும் கிடைக்காத நிலையில், பூநகரி மற்றும் யாழ். பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Related posts:
அமெரிக்காவின் 45 ஆவது அதிபரானார் டிரம்ப்!
பெலியத்தை – காங்கேசன்துறை இடையே தினசரி புகையிரத சேவை!
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் பசில் ராஜபக்ஸ!
|
|