யாழ்ப்பாணத்தில் மலேரியா நுளம்பு தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தல்!
Saturday, December 30th, 2017
அண்மையில் வடமாகானணத்தில் முக்கியமாக யாழ் நகரையும் நல்லூர் பிரதேசத்திலும் மலேரியா நோயை பரப்பக்கூடிய “அனோபிலிஸ் ஸ்ரெபன்சி”எனப்படும் புதிய நுளம்பு வகபரவலாகக் கண்டறியப்பட்டள்ளது.
இந்நுளம்புகள் கிணறுகளிலும் நீர் சேமித்து வைக்கும் நீர்த்தொட்டிகள்,நீர்த்தாங்கிகளிலும் இனப்பெருக்கம் செய்து வருவது பூச்சியியல் ஆய்வாளர்களினால் கண்டறியப்பட்டுள்ளது .
எனவே பொதுமக்கள் கிணறுகளில் காணப்படும் இந்நுளம்பின் குடம்பிகளை உண்ணக்கூடிய “கப்பீஸ்’’ என்கின்ற மீன் இனங்கள் கிணறுகளில் வளர்வதை உறுதிப்படுத்துமாறும் இயன்றவரை சகல நீர்த்தொட்டிகள், நீர்த்தாங்கிகளை நுளம்புகள் உட்புகாதவாறு நுளம்பு வலையினால் அல்லது பொருத்தமான சீலையினால் அல்லது பொருத்தமான ழூடியினால் ழூடிவைக்குமாறும் இயலாவிடின் நீர்த்தொட்டிகள்,நீர்த்தாங்கிகளை அடிக்கடி சுத்தம் செய்து பயன்படுத்ததுமாறும் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி க.நந்தகுமாரன் அறிவித்துள்ளார்.
Related posts:
|
|