யாழ்ப்பாணத்தில் பதற்றம் நீங்கி இயல்பு நிலை திரும்பியது!

யாழ்ப்பாணத்தில் பதற்றம் நீங்கி சுமுக நிலை காணப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார்.
திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்ககலன்சூரிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் ஏனைய பகுதிகளில் ஒருவித பதற்ற நிலை நிலவி வந்தது. எனினும் தற்போது இந்தப் பகுதிகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
கடந்த 20 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். பொலிசாரின் உத்தரவை மீறி சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிகப்பட்டது. இதன் காரணமாக அண்மைய நாட்களில் வடமாகாணத்தில் பதற்ற நிலை நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தவறான ஆலோசனை காரணமாக நெல் களஞ்சியத்தின் பல்வேறு பிரிவுகள் வீழ்ச்சி - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே!
எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்கு உள்ளது - இலங்கை - கென்யா ஜனாதிபதிகள் தொலைபேசியி...
விவசாய திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க படைத்தரப்பினர் தயார் – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவி...
|
|