யாழ்ப்பாணத்தில் பணியாற்றியமை எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் – இந்திய துணைத்தூதர் நடராஜன் பெருமிதம்!

Monday, February 26th, 2018

யாழ்ப்பாணத்தில் பணியாற்றியதை ஒரு பெரும் வரப்பிரசாதமாகவே கருதுகிறேன் என யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியத் துணைத்தூதராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய ஆ.நடராஜன் அவர்கள் இடமாற்றம் பெற்று செல்வதையொட்டி அவருக்கான பிரிவுபசார நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது.

யாழ்ப்பாணம் கிறீன் கிராஸ் ஹோட்டலில் நடைபெற்ற பிரிவுபசார நிகழ்வில் ஏற்புரை ஆற்றிய போதே ஆ.நடராஜன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

யாழ்ப்பாணம் என்றால் அழகு, யாழ்ப்பாணம் என்றால் அன்பு, யாழ்ப்பாணம் என்றால் அறிவு என்பதை நான் பரிபூரணமாக உணர்ந்துள்ளேன். யாழ்ப்பாண மக்களின் இலக்கிய பேச்சுக்களுக்கும், எழுத்தாற்றல்களுக்கும், கலைப்படைப்புக்களுக்கும் ஒருபோதும் குறைவேயில்லை.

யாழ்ப்பாண மக்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். எப்போதும் நான் யாழ்ப்பாணத்துக்கு வந்து செல்வேன் எனவும் ஆ.நடராஜன் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசியல் அதிகாரிகள், கலைஞர்கள், பொதுத்துறை சார்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: