யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு கடும் காற்றுடன் கூடிய மழை – 55 பேர் பாதிப்பு என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிப்பு!
Sunday, June 13th, 2021யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென நிலவிய காற்றுடன் கூடிய மழையின் காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணிமுதல் 10 மணி வரை கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவியது. இதன் தாக்கத்தினால் 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு மூன்று சிறு தொழில் முயற்சியாளர்கள் குறித்த கடும் காற்று மழை தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
குறித்த பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் சகல பிரதேச செயலகங்கள் ஊடாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை மின்சார மனிதவள ஊழியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன!
மணல் கொள்ளையர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் கைக்கலப்பு - அரியாலையில் நான்கு பொல...
கஞ்சா பயிர்ச்செய்கையை இலங்கையில் அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியாகும் - இரா...
|
|