யாழ்ப்பாணத்தில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 17 முறைப்பாடுகள்!

உள்ளராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நேற்று வரை யாழ் மாவட்டத்தில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 17 முறைப்பாடுகள் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன .
நேற்றைய தினம் மட்டும் இரண்டு தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் பதிவாகியுள்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன குறித்த முறைப்பாடுகளில் அரசியல் கட்சிகள் தனியாரிற்குச் சொந்தமான இடங்களில் துண்டுப்பிரசுரம் ஒட்டியமை, மற்றும் கட்சியினது அல்லது வேட்பாளரது விளம்பரப் பலகைகள் வைத்தமை தொடர்பபாகவே அதிக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
அத்துடன் ஒரு மோதல் சம்பவம் தொடர்பாகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில கட்சிகள் இத் தேர்தல் காலத்தில் வேலை வாய்ப்புக்களை கொழும்பில் வைத்து வழங்குவதற்கு முயற்சி செய்து வருவதாக சில முறைப்பகாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதால் அவை தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக யாழ் மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன
Related posts:
|
|