யாழ்ப்பாணத்தில் தேசிய விளையாட்டு விழா!

Thursday, September 29th, 2016

 

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை முன்னிறுத்தி 42வது தேசிய விளையாட்டு விழா நாளை முதல் 29,30, 01மற்றும் 2ம் திகதிகளில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அதற்கான ஏறபாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல முன்னாள் வீரர்கள் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளமை விசேட அம்சமாகும். இம்முறை 33 போட்டிகள் இவ்விளையாட்டு விழாவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது,அதில் புதிதாக 8 போட்டிகள் சேர்கப்பட்டுள்ளன.

ஆரம்ப நாள் நிகழ்விற்கு பிரதம அதியாக சபாநாயகர் கரு ஜயசூரியவும் அதிதிகளாக எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரிஜயசேகர,பிரதியமைச்சர் ஹரீஸ், வடமாகண முதலமைச்சர் விக்னேஸ்வரன்,வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

போட்டி இடம்பெறும் இறுதி நாள் நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்து கொள்கின்றார். தேசிய விளையாட்டு விழவில் ஆண்கள்,பெண்கள் போட்டியில் தனியாள் போட்டியில் வெற்றி பெறும் வீர,வீரங்கணைகளுக்கு முதலிடம்பெறுபவருக்கு 7500 ரூபாவும் இரண்டாமிடம்பெறுபவருக்கு 5ஆயிரம் ரூபாவும் மூன்றாமிடம் பெறும் வீரருக்கு 3 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும் அதேவேளை அணியாக போட்டியிட்டு வெற்றி பெறும் அணிக்கு 3 ஆயிரம் ரூபாவும் இரண்டாமிடம் பெறும் அணிக்கு 2 ஆயிரம் ரூபாவும் மூன்றாமிடம் பெறும் அணிக்கு 1000 ரூபாவும் சிறந்த வீர,வீரங்கனைகளுக்கு 10 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும் .

இப்போட்டி நிகழ்வுகளுக்காக மெய்வல்லுனர் போட்டியில் 800 பேரும் கடற்கரை கபடி போட்டியில் 108 பேரும் கூடைப்பந்தாட்ட போட்டியில் 206 பேரும் கயிறுழுத்தல் போட்டியில் 216 பேரும் உதைபந்தாட்ட போட்டியில் 360 பேரும் அதிகாரிகள் 650 பேரும் நடுவர்களாக 250 பேரும் மொத்தமாக 2600 பேர் தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கின்றனர்.

42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் தீபத்தை ஏற்றும் சந்தர்ப்பம் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தேசிய விளையாட்டு வீரர் ஒருவருக்கும் வீராங்கனை ஒருவருக்கும் கிடைத்துள்ளது.இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவியும் ஆசியாவின் முன்னாள் சிறந்த கோல்போடும் வீராங்கனையுமான ஜயந்தி சோமசேகரம் டி சில்வாவுக்கு விளையாட்டு விழா தீபத்தை ஏற்றும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இவருடன் இணைந்து தீபத்தை ஏற்றவுள்ளவர் இலங்கையின் முன்னாள் உதைபந்தாட்ட வீரரான சூசைப்பிள்ளை அன்தனிப்பிள்ளை க்ளிபர்ட் ஆவார்.யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1969ஆம் ஆண்டு இலங்கை பாடசாலைகள் அணியிலும் 1972ஆம் ஆண்டு தேசிய அணியிலும் இடம்பெற்றிருந்தார்.அத்துடன் மெய்வல்லுநர் போட்டிகள், கடற்கரை கபடி, உதைபந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், கயிறிழுத்தல் போட்டிகள் என்பனஇம்முறை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts: