யாழ்ப்பாணத்தில் தென்னை பயிர் செய்கை அபிவிருத்திக்கு இராணுவத்தினர் பங்களிப்பு!

பாதுகாப்பு படைகளின் பிரதாணி மற்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் எண்ணக்கருவிற்க்கமைய யாழ் மாவட்ட கட்டளை தலைமயகத்திற்குட்பட்ட சகல இராணுவ முகாங்கள், பாவனையற்ற இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் தென்னை பயிர்செய்கை செய்யும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று இந்த வேலைத்திட்டமானது எழுதுமட்டுவாழ் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆண்டகை தோட்டத்தில் பத்து ஏக்கர் அளவிலான நிலப்பரப்பில் 700 தென்னங்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளது.
இதற்க்கு தேவையான தென்னங்கன்றுகளை தென்னை,பனை,கித்துள் மற்றும் இறப்பர் செய்கை மேம்பாட்டு மற்றும் அவை சார்ந்த மேம்பாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப் படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவினால் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் .ஜெபரத்னம் அடிகளார், யாழ் மாவட்ட கரிதாஸ் கியூடெக் நிறுவனத்தின் தலைவர் யுஜின் பிரான்சிஸ் அடிகளார் மற்றும் மத குருமார்கள், 52வது காலால்படை தலைமையகத்தின் படைதளபதி 522 படை தலைமையகத்தின் தளபதி, இராணுவ முகாம்களின் உயரதிகாரிகள் மற்றும் 52வது படைப்பிரிவின் படை வீரர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|