யாழ்ப்பாணத்தில் தனியார் வகுப்புகளுக்கு தடை!

Friday, March 26th, 2021

சடுதியாக அதிகரித்து வரும் கோவிட் வைரஸ் தொற்றுப்பரவல் நிலை காரணமாக யாழ்.குடா நாட்டில் தனியார் கல்வி நிலையங்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கோவிட் தடுப்பு செயலணி இன்று மாலை மாவட்ட அரச அதிபர் தலைமையில் கூடியது.

அந்தக் கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் அனைத்திலும் கல்விச் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் வகுப்பு, ஜி.சீ.ஈ. சாதாரண தர வகுப்பு மற்றும் ஜி.சீ.ஈ.உயர்தர வகுப்பு என்பவை மட்டும் முன்னெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இவை தவிர்ந்த ஏனைய வகுப்புகள் நடத்துவதற்கு மறு அறிவித்தல் வரும் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: