யாழ்ப்பாணத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு!

Saturday, October 28th, 2017

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகள் வடமாகாண யாழ்ப்பாணம் சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளினால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

குறித்த தகவலினை வடமாகாண சுகாதார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட 10 பேர் திடீர் கிருமி தொற்றுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட குறித்த 10 பேரினதும் கண்களில் நோய்த்தாக்கம் அதிகமாக காணப்படுவதினால் பலரது கண்கள் முழுமையாக அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த தனியார் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப்பிரிவில் நோய்த் தொற்று ஏற்பட்டமைக்கான காரணத்தை அறிந்து கொள்ள விசேட ஒழு ஒன்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் தொடர்பு கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த தனியார் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப்பிரிவுகள் வடமாகாண சுகாதார அமைச்சின் உத்தரவிற்கு அமைவாக நேற்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொழும்பில் இருந்து விசேட நிபுனர் குழு யாழ்ப்பாணம் சென்று விசாரனைகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ...
500 மில்லியன் டொலர் கடன் இன்று செலுத்தப்பட்டது - மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு...
வெளிநாடுகளுக்கு சென்று அதிக குடிமக்கள் வாழும் மூன்று நாடுகளுள் இலங்கையும் ஒன்று - நாடாளுமன்ற உறுப்பி...