யாழ்ப்பாணத்தில் டெங்கு தொற்றுடன் 950 அடையாளர்: ஒருவர் பலி – இனி வரும் நாட்கள் ஆபத்தானவை என பயிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Wednesday, December 23rd, 2020

டிசம்பர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயால் 950 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ள நிலையில் ஒருவர் இறந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இவ் ஆண்டு டெங்கு நோயின் தாக்கம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்து உள்ள போதும் இனி வரும் நாட்கள் அனைவரும் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் யாழ்.குடா நாட்டில் தற்போது பெய்த அடை மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகின்ற நிலையில் டெங்கு நோய் தாக்கம் மிகவும் வேகமாக பரவும் நிலை காணப்படுகிறது.

இக்காலப்பகுதியில் முடிந்தவரை கொதித்தாறிய நீரை பருகுவது ஆரோக்கியமானதக இருப்பதுடன் வயிற்றோட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க கூடியதாக இருக்கும்.

ஆகவே இனி வரப்போகும் காலப்பகுதி தொற்று நோய்கள் எளிதாக பெறக்கூடிய காலப் பகுதியாக இருப்பதால் சுகாதாரத் தரப்பினர்கள் வழங்கும் வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றி டெங்கு நோய் பரவுவதை தடுப்பது அனைவரது பொறுப்பாகும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: