யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஒரு வயது 5 மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை பரிதாப பலி!

யாழ்ப்பாணம் கொடிகாமம், மீசாலை வடக்கில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஒரு வயது 5 மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் வாகீசன் விதுசன் என்ற குழந்தையே இதில் உயிரிழந்துள்ளான். கடந்த 6 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஆயுள்வேத வைத்தியம் செய்யப்பட்டுள்ளது.
அதன்பின், சனிக்கிழமை பிற்பகல் ஐந்து மணிக்கு சாவச்சேரி மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்கு யாழ். போதனா மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டுள்ளது..
எனினும் குழந்தை சிகிச்சை பயனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் டெங்கு காய்ச்சல் காரணமாகவே குழந்தையின் இறப்பு இடம்பெற்றதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதேவேளை, காய்ச்சலினால் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|