யாழ்ப்பாணத்தில் ஜனநாயக சுகாதார சேவைகள் சங்கம் அங்குரார்ப்பணம்!

Sunday, October 16th, 2016

 

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர்களால் “ஜனநாயக சுகாதார சேவைகள் சங்கம்” என்னும் தொழிற்சங்கம் இன்றையதினம்(16) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலை சுகாரார ஊழியர்களால் எற்பாடு செய்யப்பட்டு, யாழ். மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள ஞானம்ஸ் விருந்தினர் விடுதி மண்டபத்தில் குறித்த தொழிற்சங்கம்  இன்றையதினம் த. சசிகரன் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

15 நிர்வாக உறுப்பினர்களை கொண்ட கட்டமைப்புடன் உதயமாகியுள்ள இந்த தொழிற்சங்கமானது வடக்கு மாகாணத்தை மையப்படுத்தியதாகவும் குறித்த மாகாணத்திலுள்ள சுகாதாரம் சார்ந்த துறைசார்  ஊழியர்களை கொண்ட ஒரு தொழிற்சங்கமாக உருவாக்கப்படவுள்ளதாகவும் தனது  பொறுப்பக்களை பொறுப்பெற்றுக் கொண்டபின் உரையாற்றிய குறித்த சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

மேலும் தொழிற்சங்கமானது வடபகுதியிலுள்ள சுகாதார ஊழியர்களது நலன்களுக்காக அயராது பாடுபடும் எனவும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்காக நேர்மையுடன் பயணிக்கும் என்றும் தெரிவித்தார்.

3

2

1

4

Related posts:

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு 24 வருடங்களுக்கு பின்னர் தீர்வு : கல்வி அமைச்சர் தினேஸ் க...
ஒரே நாடு, ஒரே சட்டம் இவ்வருட இறுதிக்குள் உருவாக்கப்படும் - புதிய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் ஒன்ற...
TIN இலக்கம் வழங்குவது தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்த துரித நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் கலாந...