யாழ்ப்பாணத்தில் சூரியன் உச்சம்: வெளியில் செல்வோர் அவதானம்!

Thursday, May 3rd, 2018

நாட்டின் சில மாகாணங்களில் இன்று அதிகளவான வெப்பநிலை உணரப்படுமென காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

இதனால் வெளியில் செல்வோர் மிகவும் அவதானத்துடன் செல்லுமாறு அந் நிலையம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக வடக்கு, வடமேல், கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அதிகளவில் வெப்பம் உணரப்படுமென காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் வெப்பநிலை 44 – 45 செல்சியஸ் வரை கூட அதிகரிக்கலாம், Heat shock உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியது . குறிப்பாக 45 வயதை தாண்டியவர்கள் நன்கு நீர் அருந்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Related posts: