யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இடம்பெற்ற பெரிய வௌ்ளி திருப்பலி ஆராதனை!

Friday, April 2nd, 2021

கிறிஸ்தவ மக்களின் பெரிய வெள்ளி திருப்பலி ஆராதனை இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவலாயங்களிலும் சிறப்பான ஆராதனை இடம்பெற்றன.

இதற்கு இணைவாக வரலாற்று சிறப்புமிக்க யாழ் மரியன்னை பேராலயத்தின் முன்பாக பெரிய வெள்ளி கல்வேரி மலைக்கு உரிய 13 திருப்பாடுகள் மற்றும் உயிர்த்தெழுதல் ஞாயிறு மகிமையும் தொடர்பிலான கூட்டுத்திருப்பலி ஆராதனைகள் இன்று (02) காலை இடம்பெற்றன.

இவ் திருப்பலியினை ஆலய பங்கு முதல்வர் அன்டனி குருஸ் தலைமையிலான அருட்சகோதரர்கள் நடத்தி வைத்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றியும் சமூக இடைவெளிக்கும் முக்கியத்துவம் கொடுத்து கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே தேவாலயங்களுக்கு பொஸிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: