யாழ்ப்பாணத்தில் கொரோனா மரணங்கள் தொடர்ந்தும் அதிகரிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் மூவர் பலி!

Friday, July 30th, 2021

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும், திருநெல்வேலியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அச்சுவேலியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: