யாழ்ப்பாணத்தில் கொரோனாவுக்கு பெண்ணொருவர் பலி – வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!
Saturday, April 3rd, 2021யாழ்ப்பாணத்தில் மேலும் ஆறு பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் யாழ் மாநகரைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். மருத்துவ பீட ஆய்வு கூடம் இரண்டிலும் 470 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில் யாழ்ப்பாணம் மாநகர பருத்தித்துறை வீதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் உயிரிழந்துள்ள நிலையில், உடற்கூற்றுப் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சாவகச்சேரி பொதுச் சந்தையில் எழுமாற்றாக முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நாவற்குழியைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் , பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|