யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் கண்காட்சி – அமைச்சர் ரமேஷ்பத்திரன தலைமையில் நாளைமுதல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை முன்னெடுப்பு!

கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நாளைமுதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.
குறித்த கண்காட்சி கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்பத்திரனவின் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இதன்போது, முதலீடு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தல்களும் வழங்கப்படவுள்ளதாக, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பொறியியல்துறை பணிப்பாளர் நிஷாந்த வீரதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நல்லூர் மஹோற்சவத்தில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரிமை கோரப்படாத நிலையில்.!
மார்ச் மாதம் இலங்கை மைத்திதி – ட்ரம்ப் விசேட கலந்துரையாடல்!
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்!
|
|