யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடனான காலநிலை – கண் நோய் பரவி வருவதால் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!
Thursday, October 5th, 2023யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்து.
குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேச மாணவர்கள் மத்தியில் இந்த கண் நோய் பரவி வருவது அவதானிக்ப்பட்டுள்ளது.
கண் கடுமையாக சிவப்படைந்து, கண்ணில் பீழை தள்ளி, கண்ணில் நீர் சொரிவதுடன், கண்ணில் சிறியளவிலான வலியும் நோய் அறிகுறிகளாக உள்ளன.
குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவி வரும் இந்த தொற்று நோய் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன் மேற்கண்ட அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடுமாறு பொது சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளார்கள்.
குறித்த கண்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சுத்தமான கைக்குட்டையினை பயன்படுத்துமாறும், வெயில், தூசிகளுக்குள் செல்வதனை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வங்காள விரிகுடாவில் திடீர் மாற்றம்! வளிமண்டவியல் திணைக்களம் !
கட்டுநாயக்கா - கோயம்புத்தூர் இடையில் புதிய வானூர்தி சேவைகள்!
ரயில்வே திணைக்கள சாரதி போட்டிப் பரீட்சை ஒத்திவைப்பு!
|
|