யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அரச உத்தியோகஸ்த்தர் உட்பட 16 பேருக்கு தொற்று உறுதி!

Friday, April 23rd, 2021

யாழ்ப்பாணத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

இதன்படி யாழ்.சிறைச்சாலையில் 5 பேருக்கும், சாவகச்சேரி பகுதியில் 3 பேருக்கும், கோப்பாய் பகுதியில் ஒருவருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 பேருக்கும், யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதில் சாவகச்சோி – கைதடியில் தொற்றுக்குள்ளான ஒருவர் அரச திணைக்களம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தராக கடமையாற்றுபவர் என பணிப்பாளர் கூறியுள்ளார்.

மேலும் யாழ்.மாநகரில் தொற்றுக்குள்ளான 4 பேரும் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.

Related posts: