யாழ்ப்பாணத்தில் உள்ள 03 தீவுகளில் ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Saturday, March 2nd, 2024

யாழ்ப்பாணத்தில் உள்ள 03 தீவுகளில் ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தங்கள் நேற்று (01) கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் 10.995 அமெரிக்க டொலர் முழுமையான நிதி உதவி திட்டத்தின் கீழ் நெடுந்தீவு, அனலை தீவு, நயினா தீவு ஆகியன 2025ம் மார்ச்மாததத்திற்குள்  மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைப்புமுறைகளை பெற்றுக்கொள்ளும் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்தியாவை தளமாக கொண்ட யு- சோலர் கிளீன் எனர்ஜி சொலுசன்ஸ் என்ற நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ்  530 கிலோவோட் காற்றாலை மின்சாரம்  1700 கிலோவோட் சூரியசக்தி உட்பட சக்தி அமைப்புகளை இந்த தீவில் உருவாக்கவுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்ட உதவிகளிற்காக இந்திய அரசாங்கம் இலங்கைக்கான இந்திய தூதுவர் முன்னாள் தூதுவர் உட்பட இந்திய அதிகாரிகளுக்கு அமைச்சர் காஞ்சன விஜயசேகர  நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பயிற்சி பெறும் மாணவர்கள் மருத்துவ பயிற்சிகள் பெறுவதில் சிக்கல்!
ஐ.நா பொதுச் செயலாளர் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விசேட சந்திப்பு - உள்ளகப் பொறிமுறையூடாகப் பிரச்சினைக...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ய...