யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் அடாவடி: மூவர் கைது!
Thursday, March 7th, 2019மட்டுவில் பகுதியில் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மூவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மட்டுவில் வின்சன் வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் கதவினை கை கோடாலியினால் கொத்தி சேதப்படுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர்.
இலக்க தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் சென்ற 20க்கும் மேற்பட்ட கும்பலே தாக்குதலை மேற்கொண்டு உள்ளது.
குறித்த கும்பல் வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் மட்டுவில் சந்தியில் கூடி நின்று அட்டகாசம் புரிந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், ஏனையவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|