யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் மீது கத்திக் குத்து!

images Monday, April 16th, 2018

நெல்லியடி பகுதியில் இனந்தெரியாத நபர்களால் இரு இளைஞர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலை இலக்கத் தகடுகள் அற்ற உந்துருளியில் வருகை தந்த இருவர் நேற்று (15) மேற்கொண்டு  விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மந்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் இதுவரை இனங்காணப்படவில்லை எனவும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


வடக்கின் முதல்வருக்கு எதிராக பொது­ப­ல­சேனா இன்று வவுனியாவில் ஆர்ப்­பாட்டம்!
மீனவர் மரணம் குறித்து முழு விசாரணை - ஜனாதிபதி!
துறைமுக ஒப்பந்தத்தின் மூலம் 400 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி முதலீடு!
அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வருகிறது அபராதத் தொகை!
துன்னாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: இரு பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு!