யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் சுகாதார பணியாளர்களுக்கு உதவித் தொகை வழங்கிவைப்பு!

Tuesday, August 31st, 2021

யாழில் இராணுவத்தினரால் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு உதவித் தொகை வழங்கி வைக்கப்பட்டது.

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்குவவின் வழிகாட்டுதலின் கீழ் தற்போது நாட்டில் கொரோனா இடர் காலத்தில் யாழ் மாவட்டத்தில் சேவையாற்றி வரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் முகமாக தியாகி அறக்கொடை நிதியத்தினுடைய நிதிப் பங்களிப்பில் இன்றையதினம்(31) உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் 84 பொதுச் சுகாதார பரிசோதகர்கள், 276 குடும்பநல உத்தியோகத்தர்களுக்குரிய உதவித் தொகை இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.

இராணுவத்தின் 512 வது பிரிகேட் தலைமையகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் ஆகியோர் கலந்துகொண்டு உதவித்தொகையினை வழங்கி வைத்தனர்

Related posts: