யாழ்ப்பாணத்தில் இன்று கூடியது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு – மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வு!
Sunday, December 12th, 2021மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்வது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கலந்துரையாடல் இன்று (12) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
முன்பதாக மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்தல் என்பவற்றுக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய அண்மையில் நியமித்திருந்தார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ. எச். எம். டி. நவாஸ், ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி, யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கிறார்கள்.
இந்நிலையில் எல்எல்ஆர்சி அறிக்கை, பரணகம அறிக்கை, தருஸ்மன் அறிக்கை ஆகியவை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதே இந்த குழுவின் நோக்கம்.
இதனிடையே குறித்த குழு தனது இடைக்கால அறிக்கையை ஜூலை 20 ஆம் திகதி கையளித்திருந்தது.
இந்நிலையில் வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புக்களின் கருத்தறிய இந்த கலந்துரையாடல் நடத்தப்படுகிறது.
இன்று யாழ் மாவட்ட செயலகத்திலும், நாளை கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|