யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள புதிய சிறைச்சாலை தொகுதி ?

யாழ்பாணத்தில் புதிய சிறைச்சாலை தொகுதியொன்றை அமைப்பதற்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
2001ஆம் ஆண்டில் யாழ்பாணத்தில் நான்கு தனியார் வீடுகளில் யாழ். சிறைச்சாலைத் தொகுதி நிறுவப்பட்டது. எனினும் தேசிய எதிர்பார்ப்புக்களை நிறைவுசெய்யக்கூடிய விதத்தில் அவசியமான அடிப்படை வசதிகள் கூட அவற்றில் காணப்படவில்லை.
மேற்குறிப்பிடப்பட்ட சூழ்நிலையின் கீழ் சிறைச்சாலைகள் திணைக்களம் வசமுள்ள காணியொன்றில் 1,000 கைதிகளைத் தடுத்துவைக்கக்கூடிய யாழ்ப்பாணம் பண்ணை சிறைச்சாலை தொகுதியை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் அதன் முதற்கட்ட நிர்மாணப்பணிகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இதன் மூலம் 130 கைதிகளுக்கு போதிய தங்குமிட வசதிகள் காணப்படுகின்றது. அதன் இரண்டாம் கட்டத்தினை 623.32 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்வதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
Related posts:
|
|