யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி கடலட்டை பிடித்த 21 பேருக்கு 250,000 அபராதம்!

Saturday, January 15th, 2022

யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி கடலட்டை பிடித்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 21 பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

பருத்தித்துறை நீதிமன்ற பிரதேசத்துக்குட்பட்ட கடல் பகுதிகளில் கடந்த ஆண்டு அனுமதியின்றி கடல் அட்டை பிடித்த 21 பேருக்கு எதிராகவும் அவர்கள் பயன்படுத்திய 7 படகுகள் தொடர்பிலும் மாவட்ட நீரியல்வளத் துறை அதிகாரிகளினால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை ஆராய்ந்த பருத்தித்துறை நீதவான் பொ.கிருசாந்தன் 21 பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் குற்றப்பணம் விதித்ததோடு படகு தொடர்பான உரிமைக் கோரிக்கையை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: